இடுப்பில் பதுக்கிய ரூ. 10 லட்சம் ஹவாலா பணம் !!
Subscribe to Oneindia Tamil
சென்னை :
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை வெடிகுண்டு சம்பவத்தையடுத்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கேரள மாநிலம் கோழிக்கோடு நகலிருந்து வந்த ஷகீர் என்றஇளைஞர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டார்.
அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது தனது இடுப்பைச் சுற்றிலும்ரூபாய் நோட்டுக்களை வைத்து ஷகீர் கட்டியிருந்தது தெரிய வந்தது.
ரூ. 10 லட்சம் பணம் அவரது இடுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
அந்தப் பணம் ஹவாலா முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது விசாரணையில் தெரிய வந்தது.ஷகீர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications