For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதை சொல்லி கருணாநிதியைத் திட்டிய ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

ஆத்தூர்:

அரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே கருணாநிதி தான் பிரச்சனையைத் தூண்டிவிட்டார் என முதல்வர்ஜெயலலிதா கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பல கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைக்க ஹெலிகாப்டர்மூலம் முதல்வர் ஜெயலலிதா அங்கு சென்றார். அந்த விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:

ஒரு ஊரில் ஒரு தாய் (ஜெயலலிதா) இருந்தாள். அவள் அன்புத் தாய், நீதித் தாய். அவளுக்கு பல பிள்ளைகள்.ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு காட்டிலும் மேட்டிலும் அல்லும் பகலும்உழைத்தனர். ஆனால் ஒரு பிள்ளை (அரசு ஊழியர்கள்) மட்டும் வீட்டிலேயே இருந்தது.

மற்ற சகோதரர்கள் கொடுக்கும் பணத்துக்கு கணக்கு வைத்துக் கொள்வது தான் இந்தப் பிள்ளையின் வேலை. மற்றசகோதரர்களைக் காட்டிலும் இந்தப் பிள்ளை கொஞ்சம் படித்த பிள்ளை. நல்ல உணவு, நல்ல உடை, நல்ல ஓய்வுஎன வசதியாக வாழ்ந்த இந்தப் பிள்ளை செலவுக்கு பணம் கேட்டு அம்மாவை அடிக்கடி தொல்லைபடுத்துமாம்.

அந்த அம்மாவும் கேட்டதைக் கொடுக்கும் அம்மா தான். கேட்காமலும் கொடுக்கிற அம்மா தான். ஆனால், அந்தஆண்டு மழை பெய்யவில்லை, நிலத்தில் விளைச்சல் இல்லை. எனவே முன்பு கொடுத்தது போல இப்போதுகொடுக்க முடியவில்லை.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். அம்மா என்ன செய்ய முடியும்?. அம்மா சொன்ன வார்த்தைகளைஅந்தப் பிள்ளை காதில் போட்டுக் கொள்ளவில்லை. போதாக்குறைக்கு உள்ளூர் பணக்காரர் ஒருவரும்(கருணாநிதி), அம்மாவை எதிர்க்குமாறு அந்தப் பிள்ளையை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.

அந்த பணக்காரருக்கு எந்தக் குடும்பமும் ஒற்றுமையாய் இருந்தால் பிடிக்காது. கோள்மூட்டுவதே கொள்கை. குடிகெடுப்பதே கோட்பாடு என்ற லட்சியத்துடன் வாழும் ஆசாமி அவர்.

வீட்டை விட்டு வெளியே வந்துவிடுமாறும், வந்தால் ஆதரிப்பதாகவும் அந்த படுபாதக பணக்காரர் அந்தப்பிள்ளைக்கு உறுதிமொழி தந்தார். அந்த கபட மனிதரின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிய பிள்ளை வீட்டைவிட்டே போனான்.

கொஞ்ச நாளிலேயே, அன்பிற் சிறந்த அம்மா அச்சுறுத்தலுக்கு பணிந்துவிட மாட்டார் என்பதை உணர்ந்துகொண்டது அந்தப் பிள்ளை. தவறு செய்துவிட்டேன் என வருந்து மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்ளுமாறுகெஞ்சியது.

ஆனால், அம்மா பிள்ளைக்குள் சமரசம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்த அந்த உள்ளூர் பணக்காரர்,வீட்டுக்குப் போய்விடாதே, உனக்காக நான் கோர்ட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கிறேன், ஒரு கை பார்த்து விடுவோம்என கொம்பு சீவி விட்டார்.

ஆனால், இந்த கொம்பு சீவல்கள், மிரட்டல்கள், அடாவடிகள், வெட்டிப் பேச்சுகள் ஆகியவற்றை தூள் தூளாக்கித்தான் இந்த வெற்றிப் பயணத்தை நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு மக்களாகிய உங்களின் மகத்தானஆதரவே காரணம்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்னைதிரும்பினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X