மதுரை கோவிலில் 8 யானைகளுடன் அஷ்ட கஜ பூஜை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்ட கஜ பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி 8 யானைகள்அலங்கரிக்கப்பட்டு அவற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
உலக அமைதி, மக்கள் நல் வாழ்வு ஆகியவற்றிற்காக மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த அஷ்ட கஜ (எட்டுயானைகள்) பூஜை நடந்தது.
இதில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சேர்ந்த 3 யானைகள், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கூடல் அழகர்பெருமாள் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில் ஆகியவற்றின் யானைகளும் பங்கேற்றன.
யானைகளுக்கு தங்க முக வடாம் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பூஜைகள்நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின்போது, அங்கயற்கண்ணி என்ற குட்டி யானை, பெரிய பெரிய யானைகளைப் பார்த்தவுடன்மிரண்டு போய் அங்கும் இங்கும் ஓடியது. இதையடுத்து பாகன்கள் அதைப் பிடித்துக் கட்டி வைத்தனர்.












Click it and Unblock the Notifications