For Daily Alerts
Just In
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நாளை தொடக்கம்
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற மாதா கோவில் திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வேளங்கண்ணியில் ஆடு மேய்த்த பெண்ணுக்கு ஆரோக்கிய மேரி அன்னை அருள் பாலித்த நாளைஆண்டுதோறும் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா நாளை தொடங்குகிறது.
வரும் செப்டம்பர் 7ம் தேதி தேர் பவனி நடக்கவுள்ளது. 8ம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.


