விமானப் படையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைவு: ஏர் சீப் மார்ஷல் கவலை
சென்னை:
இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் கிருஷ்ணசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை தலைைமச்செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னையில் முதல் முறையாக விமானப் படைக் கண்காட்சி நடக்கவுள்ளது. இந்திய விமானப் படை விமானங்கள்பல்வேறு சாகஸங்களை செய்து காட்டவுள்ளன. வரும் செப்டம்பர் 6ம் தேதி இந்தக் கண்காட்சி நடக்கிறது.
தமிழக வாலிபர்களை விமானப் படைக்கு இழுக்கும் முயற்சியாக இந்தக் கண்காட்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில்பங்கேற்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கவே இன்று அவரை கிருஷ்ணசாமி சந்தித்தார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, இந்திய விமானப் படையில் ஊழியர்களின்எண்ணிக்கை தமிழகத்தின் பங்கு குறைவாகவே உள்ளது. மாநிலவாரியான பிரதிநிதித்துவப்படி இருக்க வேண்டியஅளவை விட 3 சதவீதம் குறைவாகவே உள்ளது. இந்தக் குறையை நீக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
மிக்-21 ரக விமானங்கள் பறக்கவே லாயக்கற்றவை என்று சொல்வது பெரிய தவறு. அந்த பழைய விமானங்களைஇயக்க மிகுந்த திறமையும் லாவகமும் வேண்டும். இந்த விமானங்கள் விபத்துக்குள்ளாவதற்கு விமானத்தை குறைசெல்ல முடியாது.
நமது விமானப் படையினர் அமெரிக்காவிலும், வளைகுடா நாடுகளிலும் கூட நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications