கருணாநிதியை விசாரிக்க முரசொலி அலுவலகத்துக்கும் சென்ற போலீஸ் படை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்து என்றால் திருடன் என்று கூறியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் அவரிடம்விசாரணை நடத்துவதற்காக முரசொலி அலுவலகத்திற்கு போலீஸார் சென்றனர். ஆனால், கருணாநிதியைஅவர்களால் சந்திக்க முடியவில்லை.

அரசு ஊழியர் போராட்டத்தைத் தூண்டிய வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் படை கோபாலபுரம்வீட்டுக்குச் சென்றது. அப்போது அவரிடம் அரசு ஊழியர் வழக்கு தவிர, இந்த வழக்கிலும் விசாரணை நடத்தஅந்தப் படை திட்டமிட்டிருந்த தகவல் இப்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.

இதற்காக கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற எழும்பூர் போலீசார் அங்கு அவரைச் சந்திக்க முடியாததால் முரசொலிஅலுவலகத்துக்கும் சென்றுள்ளனர். ஆனால், அங்கும் அவரை சந்திக்க முடியாமல் திரும்பி வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி சென்னையில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கண்டித்துபொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தலைவர்களில் ஒருவர் எழுதியுள்ள நூலிலேயே கூறப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டினார்.

அதே நேரத்தில், அந்த நூலின் கருத்தை தான் ஏற்கவில்லை என்றும், இந்து என்றால் மனதைத் திருடுபவன் என்றபொருளிலேயே எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் விளக்கமாகப் பேசினார்.

ஆனால், இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி கூறியதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.குறிப்பிட்ட மதத்தினரின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் கருணாநிதிமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+