திருமணத்துக்கு குறுக்கே வந்த கடமை!
திருச்சி:
முகூர்த்த நேரத்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வுக்கான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கான நேரம்குறுக்கிட்டதால், கல்யாணத்தை வேகமாக முடித்துக் கொண்டு, பரிசோதனைக்கு ஓடினார் புதுமாப்பிள்ளை.
திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்தவர் ஷேக் ஷாஜகான். சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.உடல் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் வென்ற இவர் தற்காலிகமாக பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.
மருத்துவப் பரிசோதனை மட்டுமே பாக்கியிருந்தது. அதில் தகுதி பெற்றுவிட்டால் வேலை நிரந்தரமாகிவிடும் என்றநிலை.
இவர் மீனா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். நேற்று காலை சமயபுரம் கோவிலில் வைத்து திருமணம் நடத்தமுடிவு செய்யப்பட்டது.
முகூர்த்தம் 9.30 மணிக்கு என திட்டமிடப்பட்டிருந்தது. இந் நிலையில் ஷாஜகானின் மருத்துவத் தேர்வும் நேற்றேநடப்பதாக காவல்துறையிடம் இருந்து கடிதம் வந்தது. காலை 8.30 மணிக்கே அரசு பொது மருத்துவமனையில்இருக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து திருமணத்தை ன் கூட்டியே நடத்தி விட முடிவு செய்தார் ஷாஜகான். இதைத் தொடர்ந்து காலை 7.15மணிக்கு மீனாவுக்குத் தாலி கட்டினார். பின்னர் வேட்டி, சட்டையை கழற்றி விட்டு போலீஸ பேன்ட், சட்டைக்குள்புகுந்து கொண்டு தனது மாமா கண்ணனுடன் பொது மருத்துவமனைக்குப் பறந்தார்.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்தால் தான் வேலை நிரந்தரமானதா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications