நாமக்கல் அருகே கள்ளச் சாராயத்திற்கு 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்த 8 பேர் பலியாயினர்.

Illicit arrack consumed person

எரி சாராயம் குடித்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறும் நபர்
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர், தேவராய சத்திரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 10 பேர் நேற்றிரவு,அப் பகுதியில் விற்று வரும் கள்ளச் சாராயத்தை அருந்தியுள்ளனர். குடித்த சில நிமிடங்களில் அவர்களுக்குவாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கிராமத்தினர் எடுத்துச் சென்றனர்.

அவர்கள் உடல் நிலை மிக மோசமாக இருந்ததால், பின்னர் அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அவர்கள்எடுத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது வழியிலேயே 4 பேர் பரிதாபமாக இறந்தனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் 3பேர் சிகிச்சை பலனின்றி உயிழந்தனர். இவர்கள் தவிர மேலும் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.அவரும் இன்று இறந்தார். இன்னும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரமத்திவேலூர் பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதனால்அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந் நிலையில் கள்ளச் சாராயத்தை விற்ற செந்தில் என்பவர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இறந்த 8 பேரும் கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இதை எரி சாராயம் என்று கூறி போலீசார் அனைவரையும் திசை திருப்ப முயன்றனர். தொழிற்சாலையில்பயன்படுத்தப்படும் எரி சாராயத்தை கருரில் இருந்து வாங்கி வந்து இவர்கள் அருந்தியதாகவும், இப் பகுதியில்கள்ளச் சாராயமே விற்கவில்லை என்றும் கதை விட்டனர்.

ஆனால், அப் பகுதியில் போலீஸ் உதவியுடன் கள்ளச் சாராய வியாபாரம் அமோகமாய் நடந்து வந்ததும், அதைஅருந்தியே இந்த 8 பேரும் இறந்துள்ளதும் இப்போது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+