ஊட்டியில் ஒரு வாரம் ஓய்வெடுக்க ஜெயலலிதா திட்டம்
ஊட்டி:
முதல்வர் ஜெயலலிதா ஒரு வார காலம் ஊட்டியில் ஓய்வெடுக்க உள்ளார்.
ஊட்டி வரும் 10ம் தேதி பிளாஸ்டிக் சர்ஜன்களின் மாநாடு நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்தும் பிளாஸ்டிக்சர்ஜரி நிபுணர்கள் இதில் பங்கேற்கின்றனர். பெர்ன்ஹில் ஸ்டெர்லிங் ரிசார்ட்டில நடக்கும் ன்த மாநாட்டைத் துவக்கிவைத்த முதல்வர் ஜெயலலிதா 8ம் தேதி ஊட்டி வருகிறார்.
பின்னர் அங்கேயே தங்கி இருந்து 13ம் தேதி ஊட்டியில் நடக்கும் நீலகிரி மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான துவக்கி விழாவில் பங்கேற்கிறார். இந்த விழா அரசுக் கலைக் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
சென்னையில் இருந்து கோவை வரை விமானத்தில் வந்து, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிதீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார் ஜெயலலிதா. இதற்காக அந்த ஹெலிபேட் சீரமைப்புப்பணிகள் நடந்து வருகின்றன.
ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விடுதியில் ஜெயலலிதா தங்கிருப்பார் என்று தெரிகிறது. இதற்காக அந்தவிடுதியில் ரூ. 15 லட்சம் செலவில் லிப்ட் வசதி அமைக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் இருந்து அரசு விடுதிக்குச் செல்லும் சாலைகளும்செப்பனிடப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications