பாண்டி கோவிலில் கிடா வெட்டிய 3 ஊழியர்கள் கைது
மதுரை:
மதுரை பாண்டி கோவிலில் தடையையும் மீறி ஆடுகளைப் பலியிட்ட 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளைப் பலியிடுவதைத் தடை செய்து கடந்த புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாஉத்தரவு பிறப்பித்தார். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் வழக்கம்போல்நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக ஆடுகள், சேவல்கள், கோழிகளைப்பலியிட்டனர்.
இதையடுத்து ஆடுகளைப் பலியிட அவற்றை வெட்டிய சந்தானம் (23), ரசூல் (35), அழகர் (58) ஆகியோரைகருப்பாயூரணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் மாவட்ட கலெக்டர், எஸ்.பி தலைமையிலான குழிவினர் பாண்டி கோவிலுக்குச் சென்று தக்கார் சிவாஜியைச்சந்தித்தனர். இங்கு பலியிடுவதை உடனடியாகத் தடுக்குமாறும் அது குறித்து அறிவிப்புப் பலகை வைக்குமாறும்உத்தரவிட்டனர்.
மேலும் பலியிடுவதற்கு பதில் வேறு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதையும் எழுதி வைக்குமாறுஉத்தரவிட்டனர்.
பின்னர் கோவிலுக்கு அருகாமையில் உள்ள தோப்புகள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்களையும்அழைத்த அதிகாரிகள், உங்களது கட்டடத்திலோ, இடத்திலோ பலியிடும் நிகழ்ச்சிக்கு அனுமதி தந்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
இந் நிலையில் பாண்டி கோவிலில் போலீஸ் முகாம் அமைக்கப்பட்டு கண்காணிப்புக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் கோவில்களில் விலங்குகளைப் பலியிடுவதைத் தடுத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதைபா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications