மழை நீர் சேமிப்பு வடிகால்: கெடு முடிந்தது !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீடுகள், கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்கு நேற்றுடன் கால அவகாசம்முடிந்துவிட்டது.

இதுவரை வடிகால் வசதி அமைக்காத கட்டடங்களில் வரும் அக்டோபர் 10ம் தேதி வரை உள்ளாட்சிஅமைப்புகளே இந்த வசதியை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளும். அதன் பிறகும் வடிகால் வசதிஅமைக்கப்படா விட்டால், வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் வகையில், மழை நீர் வடிகால் வசதிகளை தமிழகத்தில்உள்ள ஒவ்வொரு கட்டடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வசதியை ஏற்படுத்த ஆகஸ்ட் 31ம் தேதி (நேற்று வரை) வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த காலஅவகாசம் முடிந்துவிட்டது.

இதுவரை இந்த வசதியை அமைத்துக் கொள்ளாதவர்கள் தங்களது வீடுகள், கட்டடங்களில் இந்த வசதியைஏற்படுத்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களை பொது மக்கள் நாடலாம். அப்படி நாடினால்,உள்ளாட்சி அமைப்புகளே இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அதற்குரிய பணத்தை வசூலிக்கும். அக்டோபர்10ம் தேதி வரை இந்தப் பணி நடக்கும்.

அக்டோபர் 10ம் தேதிக்குப் பிறகும், மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படா விட்டால், வீடுகள் மற்றும்கட்டடங்களுக்குரிய குடிநீர் இணைப்பு அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கோவை, கரூர், சேலம், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டங்களில்தான் 90 சதவீத அளவுக்கு மழை நீர் வடிகால் வசதிசெய்யப்பட்டுவிட்டது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி, சிவகங்கை, நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் 81 சதவீதம் அளவுக்குஇந்தப் பணி முடிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+