புதுக்கோட்டையில் ஜெ.: திருநாவுக்கரசர் புறக்கணிப்பு
புதுக்கோட்டை:
முதல்வர் ஜெயலலிதா இன்று புதுக்கோட்டை செல்கிறார். அங்கு பல கோடி மதிப்பிலான அரசின் திட்டப் பணிகளைதொடங்கி வைத்து பொது மக்களுக்கு உதவிகளை வழங்குகிறார்.
திருச்சி செல்லும் முதல்வர் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை செல்கிறார். அங்குள்ளவிளையாட்டு ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நகழ்ச்சியில் அரசின் நலத் திட்டப் பணிகளைதொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.
சபாநாயகர் காளிமுத்து இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். ஜெயலலிதா புதுக்கோட்டைக்குவருவதையொட்டி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசர் புறக்கணிப்பு:
ஜெயலலிதாவின் புதுக்கோட்டை நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சரும், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிஎம்.பியுமான திருநாவுக்கரசர் புறக்கணிப்பார் என்று தெரிகிறது.
திருநாவுக்கரசரின் பெயரை விழா அழைப்பிதழில் தமிழக அரசு போடாமல் புறக்கணித்துள்ளது. ஆனால்,சிவகங்கை தொகுதி எம்.பியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் (இவர் திமுக எதிர்ப்பாளர்)இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதனால் திருநாவுக்கரசர், ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிப்பார் என்று பா.ஜ.க.தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இது மத்திய- மாநில அரசுகளின் நிதிகளுடன் அமலாக்கப்படும் திட்டங்களின துவக்க விழா.இதில் புதுக்கோட்டை எம்.பியும், மத்திய அமைச்சரும், அந்தப் பகுதியின் முக்கிய பா.ஜ.க. தலைவருமானதிருநாவுக்கரசரை அழைத்திருக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதைச் செய்யத் தவறியது கடும்கண்டனத்துக்குரியது என்றார்.
மேலும் விழா நடக்கும் நாளில் ஊரில் இருப்பீர்களா என்று திருநாவுக்கரசரிடம் மாவட்டக் கலெக்டர்கேட்டதாகவும், ஊரில் இருப்பேன் என்றும் விழாவில் பங்கேற்கத் தயார் என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.இதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவை முதல்வர் மாற்றிவிட்டு திருநாவுக்கரசரை அழைக்க வேண்டாம்என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் என்ற பார்வையை விட்டுவிட்டு தனி நபர் பேதம் பார்த்து செயல்பட்டுள்ளார்ஜெயலலிதா என பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications