வறட்சி கால நீர் பங்கீடு: நிபுணர் குழு யோசனையை நிராகரித்தது கர்நாடகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக நிபுணர் குழு உருவாக்கிய புதிய திட்டத்தைகர்நாடகம் நிராகரித்துவிட்டது.
இத் திட்டத்தின்படி இருக்கும் நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் நிச்சயம் பகிர்ந்து தந்தே ஆக வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. இதனால் இத் திட்டத்தை கர்நாடகம் நிராகரித்துள்ளது.
ஆனாலும், பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடும் காவிரி ஆணையக் கூட்டத்தில் இத் திட்டத்தை கர்நாடகம்அமலாக்கியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டால் அதை அந்த மாநிலம் ஏற்றுத் தான் ஆக வேண்டும்.
ஆனால், அப்படிப்பட்ட உத்தரவை வாஜ்பாய் பிறப்பிப்பாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications