ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் 140 பேருக்கு வாந்தி, பேதி: 7 பேருக்கு காலரா
சென்னை:
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த 140 குழந்தைகள் வாந்திமற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த இரு நாட்களாக தண்டையார்பேட்டையில்உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த இல்லத்தில் சிறுவர், சிறுமியர் 400 பேர் உள்ளனர். இரு நாட்களுக்கு முன் இந்த இல்லத்தைச் சேர்ந்த 140குழந்தைகளுக்கு ஒட்டுமொத்தமாக வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் அனைவரும்தண்டையார் பேட்டையில் உள்ள அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 7 பேருக்கு காலரா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.இதைத் தொடர்ந்து அனைவரும் தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 30 பேரின் உடல் நிலை தேர்ச்சியடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் இல்லத்துக்கே அனுப்பிவைக்கப்பட்டுவிட்டதாகவும் மேலும் 110 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜனார்தனன் தெரிவித்தார்.
குழந்தைகளின் உடல் நிலை சீராக தேறி வருவதாகக் கூறிய அவர், ஆதரவற்றோர் இல்லத்தில் சுகாதாரமற்றமுறையில் உணவு தயாரித்ததும், மாசுபட்ட தண்ணீரை குழந்தைகள் குடித்ததுமே வாந்தி, பேதி ஏற்படக் காரணமாகஇருந்திருக்கலாம் என்றும் கூறினார்.
இச் சம்பவத்தையடுத்து இல்லம் மற்றும் அங்குள்ள, அதன் சுற்றுப் புற பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணிகளும்,நீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி: 43 பேருக்கு வாந்தி
அதே போல பொள்ளாச்சி அருகே கெட்டுப் போன உணவைத் தின்ற 43 பேருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
கொன்னமங்கலம் அருகே நேற்று காலை ஒரு காதுகுத்து விழாவுக்காக காலையில் சமைக்கப்பட்ட உணவு மீதாமானது. இதைநேற்றிரவு அப் பகுதி ஏழை மக்கள் வாங்கிச் சென்று உண்டனர்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. இதில் 16 பெண்களும் 8 குழந்தைகளும் அடங்குவர். வாந்திஎடுத்து மயங்கி விழுந்த இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உணவு கெட்டுப் போனதே இதற்குக் காரணம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications