அதிமுகவுடன் கூட்டணி இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரும் எம்.பியுமான டி.ராஜா சென்னையில் நிருபர்களிடம்கூறியதாவது:
மக்கள் விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை அதிமுக அரசு கையாண்டு வருகிறது. இந் நிலையில் அந்தக்கட்சியுடன் எப்படிக் கூட்டணி வைக்க முடியும். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிவைக்க மாட்டோம்.
கருணாநிதி, நல்லகண்ணு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீது அரசு ஊழியர் போராட்டத்தைத் தூண்டி விட்டதாககூறி எஸ்மா சட்டத்தை பிரயோகித்துள்ளது இந்த அரசு. இது மிக விசித்திரமாக உள்ளது. இந்த விசித்திரம்தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும்.
பயங்கரவாதிகளைத் தண்டிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை அரசியல் காரணத்திற்காக,பழிவாங்கும் நோக்கத்தில் பயன்படுத்திய முதல் அரசு ஜெயலலிதாவின் அரசுதான்.
தேர்தலுக்கு முன் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முன் வந்துள்ளது. ஒரு வழியாக காங்கிரசுக்குநல்ல புத்தி வந்துள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம். ஆனால், பா.ஜ.க.வை தோற்கடிக்கும்வகையில் ஓட்டுக்களை சிதற விடாமல் தடுக்க காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வோம். இதற்காககாங்கிரசுடன் பேச்சு நடத்துவோம், இணைந்து செயல்படுவோம்.
ஆனால் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஒரு பெரிய சக்தியே அல்ல. அங்குஎங்களுக்கும் காங்கிரசுக்கும் தான் போட்டியே. இதனால் அந்த மாநிலங்களில் காங்கிரசுடன் இணைந்து செயல்படமாட்டோம்.
எங்கெல்லாம் பா.ஜ.கவை தோற்கடிக்க காங்கிரசின் தயவு வேண்டுமோ அங்கெல்லாம் அக் கட்சியுடன் இணைந்துசெயல்படுவோம் என்றார் ராஜா.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications