அரசு வழக்கறிஞர்கள் உதவி தேவையில்லை: 3 நீதிபதிகள் நிராகப்பு
சென்னை:
6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கில் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட 3 வழக்கறிஞர்களின் உதவிதேவையில்லை என்று வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளும் கூறி விட்டனர்.
இதனால் 3 வழக்கறிஞர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கலை மீண்டும் பணியில்சேர்ப்பது குறித்த வழக்கு விசாரணை நேற்று காலை தொடங்கியது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள 2 பங்களாக்களில் நீதிபதிகள் விசாரணைநடத்துகிறார்கள்.
இந்த விசாரணைக்கு அரசு சார்பில் நீதிபதிகளுக்கு உதவி செய்ய வழக்கறிஞர்கள் வெங்கடரமணி, கந்தசாமி,கோவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த மூவரையும் அழைத்த நீதிபதிகள், இப்போதுஉங்களது உதவி தேவையில்லை. தேவைப்படும்போது பார்க்கலாம் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.
2-வது நாளாக விசாரணை:
இந் நிலையில் இன்று நடக்கும் 2-வது நாள் விசாரணையின்போது157 பேரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.இவர்கள் அனைவரும் வேளாண்மைத்துறை ஊழியர்கள் ஆவர்.
விசாரணைக்கு தமிழ்செல்வி என்ற பெண் பிறந்து 20 நாளே ஆன பச்சிளம் குழந்தையுடன் வந்தார். தான் பிரசவவிடுப்பில் இருந்தபோது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறி சஸ்பெண்ட்செய்யப்பட்டதாக புகார் கூறினார்.
இன்று ஒவ்வொரு நீதிபதியும் தலா 49 ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். நாளை பிற்பட்டோர் மற்றும் மிகவும்பிற்பட்டோர், உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஊழியர்களிடம் விசாரணைநடைபெறவுள்ளது.
நேற்று தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த 171 ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.
விசாரணையின்போது, ஜூலை 2ம் தேதி வேலைக்கு வராதது ஏன், கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என்றஅரசின் உத்தரவு உங்களது கவனத்திற்க வந்ததா, இல்லையா என்ற இரண்டு முக்கிய கேள்விகளையே நீதிபதிகள்கேட்டனர். பதில்களைப் பதிவு செய்து கொண்டனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications