நாமக்கல் சாவுகள்: சாராயத்தில் விஷம் கலப்பா?- பெண் உள்பட 5 பேர் கைது
நாமக்கல்:
நாமக்கல் அருகே எட்டு பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச் சாராயத்தில் விஷம் கலக்கப்பட்டதாகத்தெரிகிறது.
கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு இடையே நிலவு வரும் போட்டியில், ஒருவரை ஒருவர் போலீசில் மாட்டிவிடஅடுத்தவரின் சாராயத்தில் ஆள் வைத்து விஷயத்தைக் கலப்பது தமிழகத்தில் வழக்கமாகி வருகிறது.
வழக்கமாக மாமூல் போய்விடுவதால் கள்ளச் சாராய கும்பல்களை லோக்கல் போலீசார் கண்டு கொள்வதில்லை.ஆனால், சாராயம் குடித்ததால் ஏதாவது சாவு அல்லது வாந்தி, பேதி, கண் பார்வை போனது போன்ற பரபரப்புகள்ஏற்பட்டால் மட்டுமே கள்ளச் சாராய வியாபாரிகள் மீது போலீஸ் கை வைக்கும்.
அதுவும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உயர் மட்டத்தில் இருந்து கேள்வி எழுந்த பின்னர் தான் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தேடி காக்கிகள் ஓடும்.
இதனால் எதிர் கோஷ்டியை மாட்டிவிட நினைக்கும் கள்ளச் சாராய கும்பல், அவர் காய்ச்சும் சாராயத்திலோ அல்லதுவிற்கும் சாராயத்திலோ ஆள் வைத்து விஷயத்தைக் கலப்பதும், இதன் மூலம் குடிப்போரை பாதிப்படைய வைத்து(பெரும்பாலும் சாக வைத்து), போட்டி வியாபாரியை போலீசிடம் மாட்ட வைப்பது வழக்கம்.
அதே போன்ற சதிச் செயல் தான் நாமக்கல்லிலும் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இங்கு விற்கப்பட்ட சாராயத்தில்விஷம் அல்லது பூச்சி மருந்து கலந்திருந்தாகத் தெரிகிறது.
ஆனால், முதலில் இதை மறுத்த மாவட்ட நிர்வாகம் பின்னர், அது விஷம் இல்லை என்றும் மண்ணெண்ணெயாகஇருக்கலாம் என்றும் கூறியுள்ளது. மண்ணெண்ணெயி கலக்கப்பட்டிருக்கலாம் என மாவட்ட கலெக்டர்ராஜேந்திரனும் எஸ்.பியும் கூறுகின்றனர்.
இந் நிலையில் விஷச் சாராயம் சம்பவம் தொடர்பாக சாராயம் விற்றதாக பொத்தனூரைச் சேர்ந்த செந்தில்,மனோகரன், நாகராஜன், கரூர் மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள், திருவட்டுதுறையைச்சேர்ந்த சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சந்திரனும் நாகராஜனும் தான் முனியம்மாளிடம் இருந்து சாராயத்தை வாங்கி வந்து செந்திலிடம் கொடுத்துவிற்கச் சொல்லியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முனியம்மாள் ஸ்பெஷலாக காய்ச்சிய சாராயம் இது என்று சொல்லிக்கொடுத்துள்ளனர்.
இதை செந்தில் பொத்தனூருக்குச் சென்று தொழிலாளர்களிடம் விற்றுள்ளார். குடித்த சில நிமிடங்களிலேயேஅவர்கள் சுருண்டு விழுந்துள்ளனர்.
இதனால் செந்திலிடம் தந்த சாராயத்தில் சந்திரன், நாகராஜன் ஆகியோர் விஷத்தைக் கலந்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது. சாராய வியாபாரம் தொடர்பாக இந்த இருவருக்கும் முனியம்மாளுக்கும் அவ்வப்போது சண்டைநடப்பதும் உண்டாம். மேலும் செந்திலுடனும் சண்டை போடுவது உண்டாம்.
முனியம்மாளையும் செந்திலையும் மாட்டி விடும் நோக்கத்தில் இந்த இருவரும் தான் விஷம் கலந்திருக்க வேண்டும்என்று கூறப்படுகிறது.
கடந்த ஆறு மாதமாக, முனியம்மாள் காய்ச்சும் சாராயம் பொத்தனூர் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு சரளமாகவிற்று வந்ததாகவும், போலீஸார் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப் பகுதிமக்கள் புகார் கூறுகிறார்கள்.
இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கருப்பன் என்பவரின்நிலை முன்னேற்றமடைந்துள்ளது. குறைந்த அளவில் குடித்ததால் இவர் உயிர் தப்பியுள்ளதாக மருத்துவர்கள்கூறியுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications