விநாயகர் சிலை பந்தலில் திடீர் தீ: கிருஸ்துவர்கள் மீது இந்து முன்னணி புகார்
சென்னை:
சென்னை ராயபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பந்தலில் திடீர் என தீ பிடித்துக் கொண்டது.இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள்தான் காரணம் என இந்து முன்னணி புகார் கூறியுள்ளது.
ராயபுரம் ஜி.ஏ. சாலையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இற்காக பந்தல்அமைத்து பூஜைகளும் நடந்து வருகின்றன. மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் அதிகாலை 5 மணியளவில் விநாயகர் சிலை இருந்த பந்தலில் தீப் பிடித்தது. வேகமாக பரவிய தீசிலையின் பீடத்திற்கும் பரவியது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தோர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல்கொடுத்தனர்.
தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்து, பாதி கருகிய நலையில் இருந்த விநாயகர் சிலையை மீட்டனர்.
இந்தத் தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புப் படையினர் கூறுகின்றனர்.
ஆனால், இது சதிச் செயல் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த பால் என்பவரின் தலைமையிலான கிறிஸ்தவர்களேஇந்த தீ விபத்துக்குக் காரணம் என்று இந்து முன்னணி அமைப்பு புகார் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து பால் விசாரணைக்காக ராயபுரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications