இன்ஸ்பெக்டர் மாயம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
செப்டம்பர் 03, 2003
இன்ஸ்பெக்டர் மாயம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை:
ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி கிருஷ்ணனை இன்னும் 3வாரத்திற்குள் கண்டுபிடிக்காவிட்டால், இதுதொடர்பான வழக்கு தமிழக காவல்துறையிடமிருந்துசிபிஐக்கு மாற்றப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கோபிகிருஷ்ணன். இவர் திமுக பிரமுகர் கே.பி.ராமலிங்கத்தின் தம்பி ஆவார். ஒரு வழக்கு தொடர்பாகவிசாரித்து வந்த ஜோதி கிருஷ்ணன் திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாககருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜோதி கிருஷ்ணனைத்தேடும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் தனது சகோதரர் ஜோதி கிருஷ்ணனை கண்டுபிடித்து ஆஜர் செய்யுமாறு கோரிகே.பி.ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர் (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்துஉயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. 3 முறை காவல்துறை அவகாசம் கேட்டு மனு செய்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மறுபடியும் அவகாசம் கேட்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் தினகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதான்கடைசி அவகாசம், இன்னும் 3 வார காலத்திற்குள் ஜோதி கிருஷ்ணன் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டி வரும் என்று எச்சரிக்கையுடன்அவகாசம் கொடுத்தது.












Click it and Unblock the Notifications