6072 ஊழியர்கள் வழக்கு: துறைத் தலைவர்களுக்கு அரசு புதிய உத்தரவு
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்விசாரணையின்போது தரும் விளக்கங்களை ஏற்க வேண்டாம் என்று 3 நீதிபதிகள் குழுவிடம் மனுமூலம் தெரிவிக்குமாறு அரசுத் துறை செயலாளர்கள், தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரது ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான வழக்குகளை 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு விசாரித்துவருகிறது.
இந்த நிலையில் 6072 பேரையும் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கும்நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக, துறைத் தலைவர்களுக்குஅரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்அனுப்பியுள்ள சமீபத்திய உத்தரவில், 6072 பேரும் டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுசரியான செயல்தான் என்பதை வருகிற 5ம் தேதிக்குள் 3 நீதிபதிகள் குழுவிடம் மனு மூலம்தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தேவைப்படும் கூடுதல் ஆதாரங்களைசேகரிக்கவும், உருவாக்கவும் பணி நியமனம் வழங்கும் அதிகாரிகளுக்கும் அதிகாரம் உள்ளது.
அரசின் பல்வேறு எச்சரிக்கைகளையும் மீறி ஜூலை 2ம் தேதி பணிக்கு வராத அரசு ஊழியர்கள்,ஊழியர் நடத்தை விதிமுறைகளின் கீழும், டெஸ்மா சட்டத்தின் கீழும் குற்றம் செய்தவராகிறார்என்பதை நீதிபதிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
வேலைநிறுத்த காலத்தில் மருத்துவ விடுப்பு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதுவும், மருத்துவவாரியம் மூலம் ஆய்வு செய்து, ஊழியர்கள் கொடுக்கும் மருத்துவ சான்றிதழ் உண்மையானதா,அதில் கூறியுள்ள காரணம் உண்மையானதா என்பதை அறிந்த பின்புதான் விடுப்பு அனுமதிக்கப்படவேண்டும். வெறுமனே சான்றிதழ் கொடுத்து விட்டால் மட்டும் போதாது என்பதையும்நீதிபதிகளிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
ஜூலை 2ம் தேதி பணிக்கு வரவில்லை என்பதை ஊழியர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். எனவேஅவர்கள் கூறும் காரணங்களை ஏற்கக் கூடாது, அவர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிககைநியாயமானதுதான் என்பதை நீதிபதிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
