வாஜ்பாய் வீடு முன்பு ஜெ. மறியல் செய்ய சோ.பா, இளங்கோவன் யோசனை
செப்டம்பர் 03, 2003
வாஜ்பாய் வீடு முன்பு ஜெ. மறியல் செய்ய சோ.பா, இளங்கோவன் யோசனை
சென்னை:
காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் வீடு முன்பு முதல்வர் ஜெயலலிதா மறியல்போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் மற்றும்செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் யோசனை தெரிவித்துள்ளனர்.
இரு தலைவர்களும் இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில்பா.ஜ.க. தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசின்செயல்பாடுகளைக் கண்டித்தும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தநம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் வாஜ்பாய் சரியானமுறையில் பதில் தராததைக் கண்டித்தும் வருகிற 22ம் தேதி நாடு முழுவதிலும் ரயில் மறியல்போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
தமிழகத்திலும் இந்தப் போராட்டம் சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்று காலை 11 மணி 12 மணிவரை தமிழகத்தில் 54 இடங்களில் ரயில் மறியல் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர்கள் தலைமை தாங்குவார்கள். கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், செயற்குழு, அரசியல்விவகாரக் குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
நாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்கிறோம். எந்த ஊரில், எந்த இடத்தில் பங்கேற்போம்என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
இதேபோல, தமிழக அரசைக் கண்டித்தும் விரைவில் போராட்டம் நடத்தப்படும். அதிமுக அரசு மீதுமக்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். எனவே இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வகையில் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ளும்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்ற முடிவை எடுக்கவேண்டியது கட்சித் தலைமைதான். உரிய நேரத்தில் அது அறிவிக்கப்படும். காங்கிரஸுடன் சேரும்எந்தக் கட்சியும் நிச்சயம் வெற்றி பெறும்.
தமிழக அரசின் கெளரவ ரேஷன் கார்டு, அரசு ஊழியர்களை குறி வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை தவிக்க விட வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா இந்தத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இது முற்றிலும் உள்நோக்கம் கொண்ட, பழிவாங்கும்மனப்பான்மையில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம்.
காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஆக்கப்பூர்வமான நடவடிக்கையைஎடுக்கவில்லை. இதுதொடர்பாக அவர் கர்நாடக முதல்வருடன் பேசி சுமூகத் தீர்வு காண முயற்சிக்கவேண்டும். முடியாவிட்டால், பிரதமர் வாஜ்பாய் வீடு முன்பு மறியல் போராட்டம் நடத்தியாவதுதமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க முயல வேண்டும். அப்படிச் செய்தால் த்மிழக காங்கிரஸ்அவருக்கு முழு ஆதரவும் தரும் என்றனர் அவர்கள்.


Click it and Unblock the Notifications
