நடைபாதையை ஆக்கிரமித்த அதிமுக, ரஜினி மன்ற அலுவலகங்கள் இடிப்பு
செப்டம்பர் 03, 2003
நடைபாதையை ஆக்கிரமித்த அதிமுக, ரஜினி மன்ற அலுவலகங்கள் இடிப்பு
சென்னை:
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அதிமுக, காங்கிரஸ்கட்சிகளின் அலுவலகங்கள் மற்றும் ரஜினி காந்த் ரசிகர் மன்ற அலுவலகமும் இடித்து தள்ளப்பட்டன.
சென்னை நகரில் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கட்டடங்கள், கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிவருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு புத்தக கடைகளும் தப்பவில்லை. இந்த நிலையில் வில்லிவாக்கம்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
வடக்கு மாட வீதியில் 6 புல்டோசர்களுடன் புகுந்த மாநகராட்சியினர் அங்குள்ள நடைபாதைகளில் இருந்தஆக்கிரமிப்புகளை அகற்றினர். அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகம், அதிமுக அலுவலகம் மற்றும்ரஜினிகாந்த் ரசிகர் மன்ற அலுவலகங்களும் இந்த இடிப்பிலிருந்து தப்பவில்லை.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பல கடைகளும் இடித்துத் தள்ளப்பட்டன.


