"ஹாக்" ரக ஜெட் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி
இந்திய விமானப் படைக்கு, இங்கிலாந்தின் அதி நவீன ஹாக் வகை போர் பயிற்சி ஜெட்விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு 66 ஹாக் வகை போர் பயிற்சி விமானங்களை வாங்க கடந்த 1984ம்ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவு பெறாமல்நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இன்று பாதுகாப்புதொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2 மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய்பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், இங்கிலாந்தின் ஹாக் வகை பயிற்சி விமானங்களைவாங்க பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.
இருப்பினும் எந்த நாட்டிடமிருந்து இந்த போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்பதை அவர்தெரிவிக்கவில்லை. இந்தக் கூட்டத்தில் துணை பிரதமர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, திட்டக் குழு துணைத் தலைவர்கே.சி.பந்த், அமைச்சரவைச் செயலாளர் கமல் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.


