மதுரை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கர மோதல்: 8 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெரும் மோதல் நடந்தது. இரு தரப்பினர் தாக்கிக் கொண்டதில்போலீஸ் உதவி கமிஷ்னர் காயமடைந்தார். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்து முன்னணி சார்பில் நடந்த இந்த விநாயகர் ஊர்வலம் முடிந்தவுடன், அதில் கலந்து கொண்டவர்கள் ஆல்பர்ட்விக்டர் மேம்பாலத்தின் கீழே கூட்டமாக சென்றனர். இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும்தென்கரை ரோடு வழியாகச் சென்றபோது அந்த மதத்துக்கு எதிராக கோஷம் போட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அந்த மதத்தினர் நெல்பேட்டை அருகே இவர்களைத் தடுத்து நிறுத்தினர். தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்றுவிட்டுத்திரும்பியவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து மோதலைத் தடுக்க வந்த போலீஸ் படை மீதும் இரு தரப்பினரும் தாக்கினர். இதில் உதவி கமிஷ்னர்காயமடைந்தார். இதைத் தொடர்ந்து அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+