மாறனை சந்திக்க வருகிறார் வாஜ்பாய்
சென்னை:
சென்னையில் இந்து ஆங்கில நாளிதழின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவரும்போது, அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ள மத்திய அமைச்சர்முரசொலி மாறனை சந்திக்க பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முரசொலி மாறன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வரும்மாறனை சென்னைக்கு அழைத்து வந்து இங்குள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் வைத்துதொடர்ந்து சிகிச்சையளிக்க மாறன் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிசமீபத்தில் தெரிவித்திருந்தார். வரும் 6ம் தேதி மாறன் அமெரிக்காவிலிருந்து அழைத்துவரப்படவுள்ளார் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மாறனிடம் உடல் நலம் விசாரிக்கபிரதமர் வாஜ்பாய் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 13ம் தேதி சென்னைபல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், இந்து ஆங்கில நாளிதழின் 125-வது ஆண்டு விழாநடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்பங்கேற்கின்றனர். இதில் கலந்து காள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அழைப்புகொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்து காள்வரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து காண்ட பின்னர் மாறனை சந்தித்து பிரதமர் வாஜ்பாய் உடல் நலம்விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.


