For Quick Alerts
For Daily Alerts
Just In
கணவருடன் தகராறு: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை
செப்டம்பர் 03, 2003
கணவருடன் தகராறு: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார் இளம்பெண்.
திருச்செங்கோடு அருகே உள்ளது கரட்டுப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சேகர்என்பவருக்கும், அவரது மனைவி வளர்மதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது. இதனால்வெறுப்படைந்த வளர்மதி, தனது கணவர் வீட்டை விட்டு கிளம்பிப் போனவுடன், குழந்தைகள்தங்கம் (4), கண்ணன் (5 மாதம்) இருவரையும் உடலுடன் சேர்த்துக் கொண்டு, மண்ணெண்ணைஊற்றித் தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டார். இதில் மூன்று பேரும் பரிதாபமாக இறந்தனர்.


