காவிரி நீர்: கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் 03, 2003

காவிரி நீர்: கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை:

காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு பா.ம.க. நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு ராமதாஸ் எழுதியுள்ள கடித விவரம்:

வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக நடந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம்,கர்நாடகத்தின் பிடிவாதத்தால், தோல்வியில் முடிந்துள்ளது. இது தமிழக மக்களுக்கும் காவிரி டெல்டாவிவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றம் தந்துள்ளது.

கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு பரிகாரம் கிடைக்கும் என தமிழகம் எதிர்பார்த்தது.ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட கர்நாடகம் அமலாக்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட அவமதிப்புவழக்கில் இன்றும் தீர்ப்பு வழங்கப்படாமல் நீதி தாமதமாகி வருகிறது.

இந் நிலையில் உங்களைத் தான் (பிரதமரை) தமிழக மக்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே,காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். குறைந்தபட்சம் காவிரிதொழில்நுட்பக் குழு வகுத்துள்ள நெறிமுறைகளின்படியாவது தமிழகத்துக்கு தர வேண்டிய பாக்கி நீரைஉடனடியாக வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் நதிகளின் மேல்படுகையில் உள்ள கர்நாடகம் போன்ற மாநிலங்கள், கீழ் படுகையில் உள்ள தமிழகம்போன்ற மாநிலங்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+