60 ஏக்கரில் உருவாகிறது புதிய தலைமைச் செயலகம்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 60 ஏக்கர் நிலத்தில் வாஸ்து சாஸ்திரப்படி புதிய தலைமைச் செயலகம்கட்டப்படவுள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள 36 ஏக்கர் நிலமும், அருகே கோட்டூர்புரத்தில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான 24ஏக்கர் நிலமும் இணைக்கப்பட்டு அங்கு மூன்று கட்டமாக தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ளது. மொத்தம் 60ஏக்கரில் செயலகம் உருவாகிறது.
பல்கலைக்கழகத்திடம் 36 ஏக்கர் நிலத்தைக் கேட்டு அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. இந்தக்கடிதத்தை பல்கலைக்கழக சிண்டிகேட் விவாதித்து நிலத்தை ஒதுக்க முடிவு செய்யும். இதன் பின்னர் மலேசியநிறுவனத்திடம் தலைமைச் செயலகம் கட்டும் பணி ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
முதல் கட்டமாக முதல்வரின் அறை, அலுவலகம், முதல்வர் அதிகாரிகளின் அலுவலகங்கள், அமைச்சர்களினஅறைகள், அவர்களது துறை அலுவலகங்கள், அவர்களுக்கான அதிகாரிகளின் அறைகள் போன்றவைஉருவாக்கப்படவுள்ளன.
இந்தப் பணிகளுக்காக ரூ. 450 கோடி வரை செலவிடப்படவுள்ளது.
இரடண்டாவது கட்டமாக பல்வேறு துறைகளுக்கும் தனித்தனி அலுவலகங்கள் கட்டப்படவுள்ளன. மூன்றாவதுகட்டமாக எம்.எல்.ஏக்கள் விடுதியும் அவர்களுக்கான அலுவலக அறைகளும் அமைக்கப்படவுள்ளன.
மேலும் இந்த வளாகத்திலேயே முதல்வர் ஜெயலலிதா வந்து செல்வதற்கு வசதியாக இன்னொரு ஹெலிகாப்டர்தளமும் உருவாக்கப்படவாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications