ஆடு வெட்டத் தடை: கிராமத்துப் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோவில் விழாவின்போது ஆடு வெட்ட தடைவிதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், ஊரின் முக்கியப் பிரமுகரை அரிவாளால்வெட்டினார்.

தமிழக கோவில்கள் மற்றும் கோவில் வளாகங்களில் ஆடுகள், கோழிகள் வெட்ட அரசு தடைவிதித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் கோவில்களில் ஆடு, கோழிகள்வெட்டப்படாமல் போலீஸார் தடை விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீறிவெட்டுபவர்களை கைது செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள நந்தகுளம் கிராமத்தில் ஆடு வெட்ட அனுமதிகிடைக்காத ஆத்திரத்தில் ஊரின் முக்கியப் பிரமுகர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.நந்தகுளம் கிராமத்தில் உள்ள சடச்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல நேற்று சாமக்கொடைவிழா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவின்போது ஆடு பலியிடப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டு விட்டதால், ஆடு பலியிடுதல் இடம் பெறவில்லை.

ஆடு பலியிடப்படாமல் சாமக் கொடை விழா நடந்து முடிந்தது. விழாவில் கலந்து கொண்டு விட்டுஊரின் முக்கியப் பிரமுகர் சுந்தரவடிவேலு என்பவர் தனது வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரதுநண்பர் ராஜன் என்பவரோடு வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சின்னத்துறை என்ற கிராமத்து வாலிபர் அங்கு வந்தார். ஆடு வெட்டக் கூடாது என்றுபோலீஸார் கூறியபோது அதை ஏன் எதிர்க்கவில்லை. மாறாக, ஆடு வெட்ட மாட்டோம் என்று வேறுஎழுதி கொடுத்து விட்டீர்களே என்று கேட்டு சுந்தர வடிவேலுவிடம் அவர் வாக்குவாதம்செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றவே தன்னிடமிருந்த அரிவாளை எடுத்து சுந்தர வடிவேலுவை சரமாரியாகவெட்டினார். தடுக்க வந்த ராஜனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத் தொடர்ந்துதிருச்செந்தூர் போலீஸார் சின்னத்துரையை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+