பா.ஜ.க.வுடனான உறவை துண்டித்துக் கொள்ள திமுக முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள திமுக தயாராகி விட்டதாகக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக விழுப்புரத்தில் நடைபெறவுள்ள திமுக மாநாட்டின்போதுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. முதல் கட்டமாக மாவட்டந்தோறும் தேர்தல்நிதி வசூலிக்கப்பட்டது. அந்த வேலை இன்னும் சில நாட்களில் முடியும் என்று தெரிகிறது. அடுத்தகட்டமாக மாவட்டந்தோறும் பிரமாண்டமான மாநாடுகளை நடத்தவுள்ளனர்.
முதல் மாநாடு விழுப்புரம் நகரில் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இந்த மாநாடு குறித்து தமிழகம்முழுவதிலும் உள்ள திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு சிலகாரணங்கள் உள்ளன.
தமிழக பா.ஜ.கவுடன் சுத்தமாக உறவில்லை. பா.ஜ.க. தலைவர்கள் அத்தனை பேரும் திமுகதலைமையையும், திமுகவின் போக்கையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தற்போதைக்குமத்தியில் மட்டுமே உறவு நீடிக்கிறது. அதுவும் கூட அமைச்சரவை அளவில் மட்டுமே.
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிகிச்சை செலவுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தபோது,மாறனின் சிகிச்சை செலவுகளை அவரது குடும்பமே ஏற்கும் என்று உடனடியாக அறிவித்தார்கருணாநிதி. இது பா.ஜ.க.தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. முகத்தில்அடித்தார்போன்று கருணாநிதி கூறி விட்டாரே என்று அவர்களிடையே கருத்து நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில் அதிமுக, பா.ஜ.க.வுடன் நெருங்கி வர ஆரம்பித்துள்ளது. வரும் தேர்தலில்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அப்படிநேர்ந்தால் அந்தக் கூட்டணியில் திமுக இருக்க முடியாது என்று திமுக தலைமை உறுதியாககூறியுள்ளது.
எனவே அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கு முன்பே, அதாவது தேர்தல்நெருங்குவதற்கு முன்பே கூட்டணியிலிருந்து விலகி விட திமுக முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில், வரும் விழுப்புரம் மாநாட்டின்போது திமுக தலைவர் கருணாநிதி முக்கியசெய்திகளை வெளியிடுவார் என்று திமுகவினர் மட்டுமல்லாது, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துஎதிர்க்கட்சியினரும் கூட ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.
என்ன நடக்கும்? பொருத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications