பிரான்ஸ் நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு
மதுரை:
தொழிற்சாலை பயன்பாட்டுக்காக காவிரி ஆற்றங்கரையில் 2 கோடி லிட்டர் கொள்ளவு கொண்டதண்ணீர் தேக்கத் தொட்டியை பெக்டெல் என்ற நிறுவனம் கட்டத் திட்டமிட்டுள்ளதற்கு காந்தி கிராமகிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மார்கண்டன் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
தண்ணீரை தனியார்மயமாக்குதல் மற்றும் வர்த்தகமயமாக்குதலை எதிர்க்கும் பிரசாரத்தை இன்றுஅவர் மதுரையில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெக்டெல் நிறுவனம்,பவானிக்கும், ஈரோட்டுக்கும் இடையே காவிரி ஆற்றங்கரையையொட்டி, 2 கோடி லிட்டர்தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவிலான பிரமாண்ட தொட்டியைக் கட்டி வருகிது. இதனால்பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
இதே நிறுவனம் முன்பு பொலிவியா நாட்டிலும் இதேபோன்ற திட்டத்தை அமல்படுத்த முயன்றது.ஆனால் அந்த நாட்டு மக்கள் மிகப் பெரும் போராட்டம் நடத்தி அதை முறியடித்தனர். இதனால்அங்கிருந்து வெளியேறியது பெக்டெல் நிறுவனம்.
தற்போது திருப்பூரில் அந்த நிறுவனம் ரூ. 560 கோடியில் தொடங்கவுள்ள திட்டத்திற்குத்தேவையான தண்ணீரை காவிரியிலிருந்து எடுக்க முயற்சிக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பாசனநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஏழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிவரும்.
இந்த்த திட்டத்திற்கான ஒப்பந்தத்திலும் ஒரு தலைபட்சம் உள்ளது. நிறுவனத்திற்கான நிதியில் 65சதவீதத்தை உலக வங்கியும், சர்வதேச நிதியமும் 19 சதவீத வட்டியில் தருகின்றன. இந்தப் பணத்தைஇந்தியாவிலிருந்து திரட்டி பிரான்ஸ் நிறுவனம் அடைக்க வேண்டும் என முறைகேடான ஒப்பந்தம்போடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திலிருந்து வெளியாகும் நீரில் மாசு கலந்திருந்தால் அதை சரி செய்யும் பொறுப்பும்இந்த நிறுவனத்திடம் இல்லை. அதை திருப்பூர் நிர்வாகம்தான் சரி செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிறுவனத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. திருப்பூர் மக்கள்குடிநீருக்குக் கூட அவதிப்படும் நிலைதான் ஏற்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications