புரட்டாசி வரை ஆடு வெட்ட அனுமதி கோரும் எம்.எல்.ஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புரட்டாசி மாதம் முடியும் வரை ஆடு, கோழி பலியிட அனுமதி தருமாறு நெல்லை மாவட்டம்ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால்கோவில்களில் குறிப்பாக கிராமப்புற கோவில்களில் ஆடு, கோழி வெட்ட முடியாத நிலையில்பக்தர்கள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் தடையை மீற முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் மோதலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,இந்துக் கோவில்களில் பிராணிகளை வதை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது நல்லசெயல்தான். இதற்காக தங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

இருப்பினும், இதனால் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம், கோவில்களில்நேர்த்திக் கடன் கொடுப்பதற்காக கடந்த ஒரு ஆண்டாக ஆடு, கோழிகளை பலர் வளர்த்துவைத்துள்ளனர். இவை அனைத்தும் தற்போது நன்றாக வளர்ந்து விட்டன.

இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் இவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள்விழிக்கிறார்கள். இவற்றை அடித்துச் சாப்பிடவும் முடியாது என்பதால் பக்தர்களின் நலன் கருதியும்,அவர்களது தெய்வ நம்பிக்கையை மதித்தும், புரட்டாசி மாதம் முடியும் வரையில் தடையுத்தரவைநிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன்.

இதன் மூலம், நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியாமல் போனால், தெய்வக் குற்றம் வந்து விடுமோஎன்ற பயத்தில் இருக்கும் பக்தர்களின் மனதில் நிம்மதி ஏற்பட வழி உருவாகும் என்று கூறியுள்ளார்அப்பாவு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+