கோட்டூர்புரத்தில் புது தலைமைச் செயலகம் அமைவது உறுதியானது
சென்னை:
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வளாககத்தில் தமிழக அரசின் புதிய தலைமைச்செயலகம் உருவாவது உறுதியாகி விட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் புதிய தலைமைச் செயலகம்கட்டி முடிக்கப்படும்.
தமிழக அரசின் தலைமைச் செயலகம் தற்போது ராஜாஜி சாலையில் சட்டசபை வளாகத்தில் உள்ளது.தலைமைச் செயலக துறை அலுவலகங்கள் உள்ள 10 மாடிக் கட்டடம் மிகவும் பழமையாகிவிட்டதாலும், இடிந்து விழும் அபாயம் இருப்பதாலும், புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடவசதி இல்லாததாலும் புதிய, அதி நவீன தலைமைச் செயலகத்தைக் கட்ட முதல்வர் ஜெயலலிதாமுடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் அருகே தலைமைச் செயலகம் மற்றும் நிர்வாக நகரத்தை அமைக்கதிட்டமிடப்பட்டது. ஆனால் நிர்வாகக் காரணங்களினால் அது கைவிடப்பட்டது. பின்னர் மெரீனாகடற்கரை அருகே உள்ள ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு அங்கு கட்ட திட்டமிடப்பட்டது.ஆனால் கல்லூரியை இடிக்க எதிர்ப்பு கிளம்பியது, அரசின் முடிவுக்கு எதிராக வழக்கும்தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கோட்டூர்புரம் பகுதியில் காலியாக உள்ள40 ஏக்கர் நிலத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இந்த இடத்தை அரசுக்குவழங்குமாறு கோரி அண்ணா பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது ஒப்புதல்கிடைத்து விட்டதால் சுமார் 43.2 ஏக்கர் நிலத்தில் தலைமைச் செயலகத்தை நிர்மாணிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
இன்னும் 2 ஆண்டுகளில் இங்கு புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்படவுள்ளது. தற்போதுதலைமைச் செயலகத்தைக் கட்டுவது தொடர்பான பணிகளில் அரசு மும்முரமாகியுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான பொறியாளர்கள், வடிவமைப்பு பொறியாளர்களை தேர்வு செய்யுமாறு,சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்குத்தேவையான நிதியாதாரத்தைத் திரட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலக வளாகத்தில் சட்டசபைக் கட்டடம், மாநாட்டுக் கூடங்கள் ஆகியவையும்இடம் பெறவுள்ளன. கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் உருவாக உள்ளதையடுத்துஇதுதொடர்பாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications