மீண்டும் த.மா.கா உருவாகுமா?
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
காங்கிரஸில் பிளவை ஏற்படுத்தி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்க முயற்சிக்க யாராவதுநினைத்தால் அவர்களை மூப்பனாரின் ஆவி மன்னிக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர்ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் அரியலூருக்கு வந்த ஜெயந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ்கட்சியில் தமாகா இணைந்து இப்போது ஒரே காங்கிரஸ்தான் இங்கு உள்ளது.
இதில் பிளவை ஏற்படுத்த யாரும் முயற்சிக்கக் கூடாது. அப்படி முயற்சித்து, மீண்டும் தமாகாவைஉருவாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களை மூப்பனாரின் ஆவி மன்னிக்காது.
தமிழக காங்கிரஸ் கோஷ்டிப் பூசலின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தலைவர்களுக்கிடையேஎந்தப் பிரச்சினையும் இல்லை. இதைக் குழப்ப நினைப்பவர்கள்தான் குழம்பிப் போவார்கள் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications