விழுப்புரம் திமுக மாநாடு நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் நகரில் திமுக சார்பில் நடக்கவுள்ள மாநாடு தொடர்பாக போலீஸார் கடும்விதிமுறைகளை விதித்துள்ளனர். இதனால் மாநாடு சுமூகமாக நடந்து முடியுமா என்ற சந்தேகம்ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரில் திமுகவின் முதல் தேர்தல் சிறப்பு மாநாடு வருகிற 20 மற்றும் 21 ஆகியதேதிகளில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக 19ம் தேதி மாலை பேரணி நடத்த திமுக தலைவர்கருணாநிதி யோசனை தெரிவித்தார். இதையடுத்து விழுப்புரம் நகர திமுக செயலாளர் பொன்முடி,மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் இததொடர்பாக அனுமதி கோரி விண்ணப்பித்தார்.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக பேரணி நடத்த திட்டமிட்டிருப்பதால் அனுமதி தர முடியாதுஎன்று காவல்துறை கூறி விட்டது. இதனால் திமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மாநாடு நடத்தவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர்விதித்துள்ளனர். பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு நேராமல் மாநாடு நடத்த வேண்டும்.போக்குவரத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது.

கோஷங்கள் போடுவதில் ஒழுக்கம் இருக்க வேண்டும். மற்றவர்களை புண்படுத்தும் விதமானவாசகங்கள் கோஷங்களில் இருக்கக் கூடாது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமேஒலிபெருக்கிகளை பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.

மாநாட்டுக்கு வரும் கட்சித் தொண்டர்களால் ஏதாவது பொதுசொத்துக்கு சேதம் ஏற்பட்டால், அதற்குகட்சித் தலைவர்கள்தான் பொறுப்பு. அமைதியாக நடந்து முடிவதை அவர்கள்தான் உறுதி செய்யவேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் கூட்டமாக செல்வதோ, வாகனங்களை நிறுத்துவதோ கூடாது. மாநாட்டுப்பந்தலில் அமைக்கப்பட்டுள்ள மேடை உறுதியானது, ஆபத்து நேராது என்பதற்குரிய ஆட்சேபனைஇல்லை சான்றிதழை மாநாடு துவங்குவதற்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.

மாநாடு அமைதியாக நடப்பதில் சிக்கல் ஏற்படும், வன்முறை ஏற்படலாம் என்று போலீஸார்கருதினால், மாநாட்டை தடை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு.

இந்த விதிமுறைகளுக்கு மாநாட்டு அமைப்பாளர்கள் கட்டுப்பட வேண்டும். இல்லாவிட்டாலோ,அல்லது மீறி நடந்தாலோ மாநாடு நடத்த தடை விதிக்கப்படும் என்று காவல்துறை கிடுக்கிப்பிடிபோட்டுள்ளது.

இதனால் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க அதிமுக அரசு சதி செய்வதாக திமுக வட்டாரத்தில்கோபமாக உள்ளனர். இருப்பினும் திட்டமிப்படி சிறப்பாக நடத்தி முடிக்க திமுகவினர் உறுதிபூண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+