போலி வருமான வரி அதிகாரிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வருமான வரி அதிகாரிகள் போல நடித்து, தமிழகம் முழுவதிலும் பல பேரிடம் ரூ. 2.5கோடிபணத்தை மோசடி செய்த 5 பேர் கும்பலை சேலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேல்செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆத்தூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் வீட்டிற்கு 2 நாட்களுக்குமுன்பு 5 பேர் கொண்ட குழு வந்துள்ளது. தங்களை வருமான வரி அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட அவர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

பின்னர் கணக்கில் வரவில்லை என்று கூறி ரூ. 1.29 லட்சம் பணம், 95 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் கிளம்பி விட்டனர். அவர்கள் மேல் சந்தேகம் வந்ததால் ,தொழிலதிபர் புகார்கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் இந்த 5 பேரும் சிக்கினர். இவர்கள் வருமான வரிஅதிகாரிகள் போல நடித்து, தமிழகம் முழுவதிலும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள் வீடுகளுக்குச்சென்று பணம், நகைகளை திருடுவதை வழக்கமாக கொண்டவர்கள். தமிழகம் மற்றும்பாண்டிச்சேரியில் 25 இடங்களில் இதுபோல நடித்து ரூ. 2.5 கோடி வரை இப்படி மோசடிசெய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள், போலி ரப்பர் ஸ்டாம்புகள்,லெட்டர் பேடுகள், கைவிலங்குகள், போலிஸ் சீருடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.

இவர்களைக் கைது செய்யும் விஷயத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட ஒரு ஏட்டு மற்றும்ஆத்தூரைச் சேர்ந்த 3 பேருக்கு பொன் மாணிக்கவேல் பாராட்டி பரிசு கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+