கல்வி முறையில் மாற்றம் தேவை : அப்துல் கலாம்

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி:

வளரும் நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு உதவும் வகையில் நமது கல்விக் கொளள்கை இருக்கவேண்டும் என குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் தினத்தையொட்டி புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் 282 ஆசிரியர்களுக்குதேசிய நல்லாசிரியர் விருதுகளை அவர் வழங்கினார். பின்னர் பேசுகையில், 2020ம் ஆண்டுக்குள்இந்தியாவை வளரும் நாடாக்க வேண்டும் என்பது எனது கனவு. அதற்கு மாணவர்களும், இந்தியமக்கள் அனைவரும் உறுதுணையாக இருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.

இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றியமைப்பதற்கு நமது கல்வி முறையும்ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கேற்றவாறு கல்விக் கொள்கையை நாம் மாற்றியமைக்கவேண்டும்.

சமூக வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிகப் பெரியது. நல்ல ஆசிரியர்களால்தான் நல்லமனங்களை மாணவர்களிடம் உருவாக்க முடியும். அவர்களுக்குள் தன்னம்பிக்யைையும், மனஉறுதியையும் ஏற்படுத்த முடியும். அப்போதுதான் மாணவர்கள் காணும் கனவு நனவாக முடியும்.

மாணவர்களுக்குத் தேவையான கல்வியைப் போதிப்பதற்கு ஆசிரியர்களுக்கு நல்ல வசதிகள்செய்து தரப்பட வேண்டும். வாழ்க்கைக்கு உதவும் வகையிலான கல்வி முறை இருந்தால்தான்ஆசிரியர்களால், நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.

ஆசிரியர்கள் தங்களது தொழிலை காதலிக்க வேண்டும். அப்போதுதான் ஈடுபாட்டுடன்போதனையில் ஈடுபட முடியும்.

இங்கு விருது பெற்றுள்ள ஆசிரியர்கள், நாட்டிலுள்ள 20 கோடி மாணவர்களின் பிரதிநிதிகளாகஅமர்ந்துள்ளார்கள். உங்களது திறமைகள் உங்களுடன் நின்று விடக் கூடாது. அது விரவிப் பரவவேண்டும் என்றார் கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+