சென்னை லாட்ஜில் அழுகிய நிலையில் பெண் பிணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விடுதியில் பெண்ணின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கொன்று விட்டுதலைமறைவாகி விட்ட வாலிபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் உள்ள விடுதியில் சில தினங்களுக்கு முன்பு ஒருஜோடி வந்து அறை எடுத்துத் தங்கியது. 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறைமூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை துர்நாற்றம் வீசவே போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.போலீஸார் வந்து அறைக் கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, அந்தப் பெண் பிணமாககிடந்தார்.
உடல் அழுகி மிகவும் கோரமான நிலையில் பிணம் இருந்தது. அந்தப் பெண்ணுடன் வந்தவர்தலைமறைவாகி விட்டதால் அவர்தான் கொன்றிருக்க வேண்டும் என்று போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.
பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications