திருச்சி திமுக எம்.எல்.ஏ. திடீர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி

போக்குவரத்து போலீஸாரைத் தாக்கியதாக கூறி திருச்சி-1 சட்டசபைத் தொகுதி திமுக எம்.எல்.ஏ.பரணி குமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி-1 தொகுதியின் கீழ் வரும் உய்யக்கொண்டான் கால்வாயில் தூர் வாரும் பணி நடந்துவருகிறது. இதைப் பார்வையிட பரணிகுமார் எம்.எல்.ஏவும் அவரது ஆதரவாளர்களும் அங்குசென்றிருந்தனர்.

அவர்கள் செல்லும்போது காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவாகனங்கள் தேக்கமடைந்து நின்றிருந்தன. இதையடுத்து போக்குவரத்தை சீர் செய்யுமாறு பரணிகுமார், அங்கிருந்த போக்குவரத்து காவலர்களிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாகஅவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு பரணிகுமார், மாநகராட்சி கவுன்சிலர் வேலுஉள்ளிட்ட 4 பேரை போலீஸார் விசாரணைக்காக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். விசாரணைக்குப் பிறகு இரவு 10 மணியளவில் அவர்களை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+