"தேசிய அரசியல்வாதி" ஆனார் கருணாநிதி !
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
வழக்கமாக அணியும் வேட்டியை துறந்து, தேசிய அரசியல்வாதிகளைப் போல பைஜாமாவுக்குமாறினார் திமுக தலைவர் கருணாநிதி.
திருப்பூரில் நேற்று திமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடந்தது. இதற்கு முன்பாகசெய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் கருணாநிதி. செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வந்தகருணாநிதியைப் பார்த்து செய்தியாளர்கள் ஆச்சரியமடைந்தனர். காரணம் அவர் வேட்டி கட்டாமல்,பைஜாமாவில் வந்திருந்ததுதான்.
அதை கருணாநிதியிடமும் கேட்டனர், எப்போதிருந்து இந்த மாற்றம் என்று. அதற்கு கருணாநிதி,சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில் ஏறியவுடன் இதற்கு மாறி விட்டேன். இதுவும்வசதியாகத்தான் இருக்கிறது. வேட்டி அவிழும் என்ற பயமும் இல்லையே என்று சிரித்துக் கொண்டேகூறவும், அங்கிருந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டவர்களும் சிரித்தனர்.












Click it and Unblock the Notifications