For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவிலில் ஆடு வெட்டியதாக பூசாரி கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கோவில் விழாவில் ஆடு பலி கொடுத்ததாக கோவில் பூசாரியை போலீஸார்கைது செய்தனர்.
கோவில்கள், கோவில் வளாகங்களில் ஆடு, கோழிகளைப் பலியிட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதை மீறுவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் துப்பாஸ்பட்டி என்ற இடத்தில் சந்தன மாரியம்மன் கோவில்திருவிழா நடந்து வருகிறது. விழாவின்போது சில ஆடுகள் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது.
விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீஸார் ஆட்டை வெட்டியதாக கூறி கோவில் பூசாரிமுனியசாமி உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். ஆனால் வீட்டில் வைத்து ஆட்டை வெட்டி,கோவிலுக்கு எடுத்து வந்ததாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


