அரசு ஊழியர்கள் பணி முறையில் மாற்றம்: ஜெ. தீவிர ஆலோசனை
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் பிற துறை ஊழியர்களின் பணி முறையில்அதிரடி மாற்றம் கொண்டு வருவது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று தீவிர ஆலோசனைநடத்தினார். இதுதொடர்பாக சில நாட்களில் முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர் வேலைநிறுத்தம் பிசுபிசுத்துப் போனதையடுத்து தலைமைச் செயலக ஊழியர்களின்பணி முறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்.அதேபோல, பிற துறை ஊழியர்களின் பணி முறைகளையும் ஒழுங்குபடுத்த அவர் முடிவு செய்தார்.
தலைமைச் செயலக ஊழியர்களின் பணி முறை மாற்றியமைப்பு குறித்து நிதியமைச்சர் பொன்னையன்தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தியது. பலமுறை நடந்த விவாதத்திற்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவிடம் இறுதிஅறிக்கையை நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து நேற்று முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர்மெய்கண்ட தேவன், நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு சில முக்கிய முடிவுகளை முதல்வர் எடுத்துள்ளதாகவும், அந்த முடிவுகள்அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டு அதன் ஒப்புதல் பெற்ற பின்னர், தலைமைச் செயலகஊழியர்களின் பணி வரையறை குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


