17ம் தேதி கோர்ட்டில் ஆஜராக அழகிரிக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி, வருகிற 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படிமதுரை 6-வது குற்றவியல் நடுவர் வனிதா சம்மன் அனுப்பியுள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்ட 14 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அழகிரி உள்ளிட்டவர்கள் ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.அழகிரி பெங்களூரில் தங்கி அங்குள்ள கோர்ட்டில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில் வருகிற 17ம் தேதி மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதிவனிதா அழகிரிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அவரிடம்குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த மாதம் 18ம் தேதி இந்தவழக்கில் குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications