கலாம் பெயரில் விருதுகள்: அண்ணா பல்கலை.
சென்னை:
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் பொறியியல் கல்லூரிகளை ஊக்குவிக்கும் வகையில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பொறியியல் கல்லூரி முதல்வர்களின் மாநாடு சனிக்கிழமை நடந்தது. இதில் பேசியபாலகுருசாமி, பொறியியல் கல்லூரி மாணவர்களையும், ஆய்வாளர்களையும், கல்லூரிகளையும்அதிகம் நேசிப்பவர் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்.
எனவே கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதியன்று மிகப் பெரிய விழா நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த விழாவின்போது சிறந்து விளங்கும் பொறியியல் கல்லூரிகள், சிறப்பாகபராமரிக்கப்படும் கல்லூரிகள், சிறந்த முதல்வர்கள், சிறந்த ஆசிரியர்கள் ஆகிய 4 விருதுகள்வழங்கத் திட்டமிட்டுள்ளோம். கலாமின் பெயரில் விருதுகள் அமைந்திருக்கும்.
அடுத்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படும்என்றார் பாலகுருசாமி.












Click it and Unblock the Notifications