ஓணம்: ஆளுநர், ஜெயலலிதா வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மலையாளிகளுக்கு தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஓணம்பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராம் மோகன் ராவ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் கலாச்சாரபாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை உணர இன்னும் ஒரு வாய்ப்பாக இந்தஓணம் பண்டிகை அமைய வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகளுக்கும், உலகெங்கிலும்உள்ள மலையாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், கேரளாவிலும், தமிழகத்திலும் மற்றும்உலகெங்கிலும் வசிக்கும் மலையாள மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும், ஒற்றுமையுடனும்,மற்ற மக்களுடன் சகோதரத்துவத்துடனும் வாழ இந்த ஓணம் பண்டிகை உதவட்டும் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications