ரவுடியைப் பிடிக்க முயன்ற எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி என்ற இடத்தில் ரவுடியைப் பிடிக்க முயன்ற சப்இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டினான் அந்த ரவுடி. இதையடுத்து ரவுடியை சப் இன்ஸ்பெக்டர்துப்பாக்கியால் சுட்டார்.

சின்னாளப்பட்டி பகுதியில் அடிக்கடி, கொள்ளை, திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் நடந்து வந்தன.இதற்கு சரவணன் என்ற ரவுடிதான் காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து மறைந்திருந்த சரவணனைப் பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில்ஒரு போலீஸ் படை விரைந்தது. போலீஸாரைப் பார்த்ததும் அவர்களை அரிவாளால் வெட்டமுயன்றான் சரவணன்.

இதில் முத்துப் பாண்டிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகதன்னிடமிருந்த துப்பாக்கியால், சரவணனை சுட்டார் முத்துப்பாண்டி. இதில் சரவணனுக்குக் காயம்ஏற்பட்டது. இருப்பினும், காயத்துடன் அவன் தப்பியோடி விட்டான்.

சப் இன்ஸ்பெக்டர் முத்துப் பாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+