பாய்ஸ் மீண்டும் சென்சார் செய்யப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்திற்கு சென்னையில் தணிக்கைபெறாதது ஏன் என்று விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு சென்னையில் உள்ளசென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள பாய்ஸ்படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டது. படத்தில் ஏராளமான ஆபாச காட்சிகளும்,அறுவறுக்கத்தக்க வசனங்களும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தியேட்டர்களுக்கு பெண்களே வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்பாய்ஸ் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரித்த ரத்னம், தெலுங்குப் படத்திற்கானசென்சாரை மட்டும் பெற்றுள்ளார். பின்னர் அதை தமிழில் டப் செய்து வெளியிடுவது போல போக்குகாட்டி சென்சார் பெறாமல் தமிழில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் கொடுத்த ஐடியாப்படி ரத்னம் செயல்பட்டதாக கூறப்படுகிறது. சென்சார்போர்டின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பவே இந்த டெக்னிக்கை பயன்படுத்தியதாக கோலிவுட்டில்பேசப்படுகிறது.

இந்த நிலையில் தமிழில் வெளியாகியுள்ள பாய்ஸ் படத்திற்கு சென்னையில் உள்ள சென்சார்போர்டில் ஏன் அனுமதி வாங்கவில்லை என்று கோட்டு சென்சார் போர்டு தலைவர் ராஜு நோட்டீஸ்அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

தயாரிப்பாளர் ரத்னத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நோட்டீஸில், தமிழில் எடுக்கப்பட்டபாய்ஸ் படத்திற்கு சென்னையில் சான்றிதழ் வாங்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பெறப்படவில்லை. இதற்கு என்ன காரணம்? இதை சரிவர விளக்காவிட்டால் உங்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாய்ஸ் படத்திற்குக் கிளம்பியுள்ள எதிர்பாராத எதிர்ப்பு காரணமாக, சென்னையிலிருந்துவெளிநாட்டுக்குக் கிளம்பிச் சென்று விட்டார் ஷங்கர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+