ரூ. 50 லட்சம் லஞ்சம்: அதிமுக எம்.பி.யை விசாரிக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்க லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் அதிமுகபொருளாளரும், எம்.பியுமான திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரணை நடத்துமாறு சென்னை நகரகாவல்துறை ஆணையர் விஜயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்க தமிழக அரசின் ஆட்சேபனை இல்லை சான்றிதழை வழங்கவேண்டும். இந்த சான்றிதழை வாங்கித் தருவதாக கூறி தன்னை ஆனந்த முரசு பத்திரிக்கை அதிபர்கணபதி, ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர், ரூ. 65 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறிசெளந்தரபாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து கணபதி கைது செய்யப்பட்டார். ஆனால் ஆனந்தன் தலைமறைவாகி விட்டார்.பின்னர் முன் ஜாமீன் பெற்றார். கணபதியும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்றுவிசாரணைக்கு வந்தது.

நீதிபதி கற்பக விநாயகம் இதை விசாரித்தபோது, போலீஸார் நடத்திய விசாரணையின்போது,அதிமுக எம்.பி. திண்டுக்கல் சீனிவாசனுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கணபதிகூறியுள்ளார். எனவே அதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரணை நடத்துமாறு சென்னைமாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடுகிறேன். கணபதிக்கு ஜாமீன் கொடுக்கப்படுகிறதுஎன்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+