கல்யாண கலாட்டாவில் மணமகளின் சகோதரர் கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே உள்ள பெரியசாமிபுரம் பகுதியில் திருமணத்தின்போது ஏற்பட்ட மோதலில்மணமகளின் சகோதரர் அடித்துக் கொல்லப்பட்டார்.
பெரியசாமிபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நடந்த திருமணத்திற்குப் பிறகு அவரவர்ஊர்களுக்குக் கிளம்பினர். அப்போது வேனை வெளியே எடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்குஇடையே மோதல் ஏற்பட்டது.
இதில் வில்சன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இவர் மணமகளின் சகோதரர் ஆவார். இதனால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கந்தன், பாண்டியன் மற்றும் செல்லத்துரை ஆகியோர்காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து கருப்பசாமி, வெள்ளைப்பாண்டி உள்ளிட்ட சிலர் மீதுவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு மேலும் மோதல் ஏற்படாமல்இருக்க போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications