ரயில் மறியலைக் கைவிட்டது காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாககாங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதிலும் வருகிற 22ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அகிலஇந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் ரயில் மறியல் போராட்டத்தைக்கைவிட்டுள்ளதாகவும், வருகிற 22ம் தேதி நடத்தவிருந்த போராட்டத்திற்குப் பதில் 30ம் தேதிமத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டது ஏன் என்ற காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.இருப்பினும், ஒரு மணி நேரம் ரயில் மறியல் நடத்தினால் பொதுமக்களின் அதிருப்தியை சந்திக்கநேரிடும் என்பதால்தான் அதை காங்கிரஸ் கட்சி கைவிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications